யாழ் தேவி துயிலுரியப்படுகிறாள்
துச்சாதனன்களால் அல்ல,
பாஞ்சாலிகளால்...
உரக்க கட்டளை இடு துரியோதனா
ஆடைகளை களையாதே என்று..
சபதம் செய்து விடு துச்சாதனா
ஆடை கொண்டு அங்கம் மூடாமல்
போகமாட்டேன் என்று...
கௌரவா்களே ஓடி வாருங்கள்
பாஞ்சாலிகள் துயிலுரிகிரார்கள்...
கண்ணன் சேலை தேடி
ஓடிக்கொண்டிருக்கிறான்...
தமிழ்நிலா
0 comments:
Post a Comment