நிலவு
வான தேவதையின்
தங்க மூக்குத்தி...
இருள் விதவையின்
மஞ்சள் பொட்டு...
ஒப்பனை செய்யாத
உலக அழகி..
பூமியின் முதல் காதலி...
ஏழைகள் வீட்டு
மின்குமிழ்...
சின்ன குழந்தைகளின்
சத்துணவு..
விஞ்ஞானிகளின் விந்தை உலகம்..
கவிஞர்களின் ஒரு தலைக்காதலி...
நிலவு அதிஸ்டகாரி தான்
உடலில் ஆங்காங்கே மச்சங்கள்...
இருப்பினும்
இரண்டாம் முகம் இதை விட
அழகாய் இருக்கும்...!
நிலவு மின்னலின் வேர்வையிலிருந்து
தான் பிறந்திருக்கும்...
ஆனால்
இந்த தண்மையை மழையிடம்
எப்படி பெற்றிருக்கும்...??
பசி அடங்கியிராது
கூனல் பாட்டி
நிலவில் வடை சுட்டிராவிட்டால்..
வாழ்க்கையின் அர்த்தம்
புரிந்திராது - நிலவு
வளர்ந்து தேயாவிட்டால்...
அமாவசை தான்
நிலவு வராமல் இருந்தால்...
இருந்தும்..
நிலவே உன்னை,
தூரத்தில் இருந்தே
இரசிக்க விரும்புகிறேன்..
தொடாத தூரத்தில் நீ இருப்பதால் அல்ல..
தொட்டு விட கூடாது என்பதால்...
தமிழ்நிலா
2 comments:
தொடாத தூரத்தில் நீ இருப்பதால் அல்ல
தொட்டு விட கூடாது என்பதால்..
அருமை நண்பா...
ம்ம் உண்மைதான்
அழகான கவி...
Post a Comment