உலகம் அழியும் ஆனால்
நாளை என்று யார் சொன்னார்கள்...
மாயன் சொன்னானா..
உன் மாமன் சொன்னானா..
நாளை உலகம் அழியும் என்று..?
மாயன் என்றால் மாயம்
மாயம் என்றால்
கண்கட்டி வித்தை தானே..
உன் கண்களைக் கட்டிவிட்டு
சொல்லவதெல்லாம் உண்மையா
நண்பனே...??
மாத நாற்காட்டியை
வருடம் ஒருமுறை மாற்றிவிடுகிறாய்
மாயன் நாற்காட்டியும் முடிந்துவிட்டது
அவ்வளவுதான். மாற்றிவிடு
உன்னையும் சேர்த்து...
பைபிள் சொல்கிறதாம்..
கீதை சொல்கிறதாம்..
குர்ரான் சொல்கிறதாம்..
யார் இல்லை என்றது..
நாளை என்று சொல்கிறதா...??
மனிதா
அழியத்தான் போகிறது
உன்னால் தான்... ஆனால்
நாளை இல்லை...
அழியப்போகிறது என்று
சொல்கிறாய்..
யாருக்காவது உதவினாயா...?
ஒரு நேர உணவு கொடுத்தாயா..?
இல்லைத் தானே..
உனக்கே தெரியும் அழியாது என்று...
வதந்திகளால் நீ
பிரபல்யம் அடைய நினைக்கிறாய்..
உலகம் உன்னை பார்த்து
சிரிக்கிறது..
அழிவது நீயா நானா என்று..
20-12-2012
11.55-11.59 PM
நாளை இன்றாகிவிட்டது..
இன்று நேற்றாகிவிட்டது...
எல்லாமே அப்படியே தான்...
மனிதா
நீ கூட...!!
21-12-2012
12.02 AM
தமிழ்நிலா
5 comments:
arumaiyaana kavithai..
அருமை.
பதிவிட்ட நேரத்தைக் குறித்ததை
மிகவும் ரசித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி உங்கள் ஆதரவுக்கும் கருத்துகளுக்கும்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நன்றி
Post a Comment