என் சந்ததியிற்கு
விடுச்செல்ல என்னிடம்
எதுவும் இல்லை
என்னில் மிஞ்சும்
ஒருபிடி சாம்பலும்
சில நாட்களில்
கரைந்துபோய்விடும்...
சிறுவயதில் கட்டிய
மணல் வீடு...
இளவயதில் செதுக்கிய
காதல் கோட்டை...
முதுவயத்தில் கண்ட
எதிர்கால கனவுகள்..
கலைந்துபோனது...
கவிதைகளை
காகிதத்தில் எழுதிவைத்தேன்
மங்கிப்போனது...
கதைகளை
அச்சில் கோர்த்துவைத்தேன்
செல்லரித்துப்போனது...
பாடல்களாக்கி
பதிவேற்றி வைத்தேன்..
காலம் தின்று போய்விடும்...
நினைவுகள்
நிறையிழக்கலாம்..
நிழற்படங்கள்
நிறமிழக்கலாம்..
நான் முற்றிலுமாய்
காணாமல் போய்விடுவேன்..
என் சந்ததியிற்கு
விடுச்செல்ல
என்னிடம் எதுவும் இல்லை...
தமிழ்நிலா
4 comments:
பொருள் பொதிந்த புலம்பல் நன்று!
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
அருமையன கவிதை எழுதிய விதம் நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Post a Comment