மௌனத்தில் இருந்து
ஆரம்பிக்கின்றன
எல்லா நிராகரிப்புகளும்..
ஒன்று அல்லது
ஏதோவொன்று
எப்போதும் நிராகரிக்கப்படும்..
என்னால் அல்லது
உங்களால்...
பிறப்பில்
அன்பின் நிராகரிப்புகள்..
பருவங்களில்
காதல் நிராகரிப்புகள்..
துடிப்புக்களில்
நட்பின் நிராகரிப்புகள்..
இளமையில்
இறை நிராகரிப்புகள்..
முதிர்கையில்
முதுமை நிராகரிப்புகள்..
தளர்கையில்
தனிமை நிராகரிப்புகள்...
இறப்பில்
உறவு நிராகரிப்புகள்..
ஏதோவொன்று அல்லது
ஒவ்வொன்றும்
எப்போதும் நிராகரிக்கப்படும்..
என்னால் அல்லது
உங்களால்...
அவசரமானதும்
அர்த்தமுள்ளதும்
அறிவானதுமான
எனக்கான உங்கள்
நிராகரிப்புகளையும் தாண்டி
வலிகளுடன்..
தமிழ்நிலா
0 comments:
Post a Comment