நடந்து போகையில்
கடந்திருந்தது ஒரு கல்..
அழைத்தது
கடவுளின் எச்சம் என்றது..
கல் எடுத்து சிலைவடித்து..
கருவறையில் சிறையிலிட்டு
கடவுள் என்று சொல்லிட்ட
கல்லின் எச்சம் அது...
ஊர்கொரு குடிலமைத்து
கோவில் என்று பெயருமிட்டு..
அண்டத்தை அடையாளத்துக்குள்
அடக்கிட நினைத்திட்ட
மடமையின் எச்சம் அது...
இன்னும் சொல்லிற்று...
கடவுள் என்னும் மனிதனின்
பாசாங்கு சொலிற்று...கருவறையில் கன்னியுடன்
காமுறும் கயவர்களை
நம்பும் எம் மடமை சொலிற்று...
கொட்டும் காணிக்கை
கோடியில் குறையவில்லை..
நிறையும் பைகள்
எதிலுமே குறைவில்லை....
கடவுளுக்கு முன்னாலே
பங்குகள் பிரிவதாய்
எல்லாம் சொல்லிற்று....
மணி ஒலித்தது
சிரித்தது அந்த கல்...
என்னவென்று வினவினேன்...
கடவுளின் உணவு நேரம் என்றது,
மணி அடித்திட உணவு
சிறையிருக்கும் கடவுளுக்கும்..
சொல்லி சிரித்தது...
நீ கூட கடவுள் தான்
உளியின் வலிகளை
பொறுத்துக்கொள்கிறாய்...
என்றேன்... மீண்டும்
மண்ணுக்குள் சென்று
உறங்கிக்கொண்டது...
ஏதும் சொல்லாமல்.....
பின் குறிப்பு- கடவுள் மனிதம் தொலைந்த அன்று காணாமல் போய்விட்டார்...
தமிழ்நிலா
காற்றுவெளி February 2014
4 comments:
நச் நச் வரிகள்... உண்மையும் கூட...
வாழ்த்துக்கள்...
வணக்கம்
அற்புதமான கவிதை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றிகள்
Post a Comment