
நாளொரு கனவின் முடிதலுடன்
ஆரம்பமாகிறது
ஒவ்வொரு காலையும்...
கனவுகள்,
உள்மன வெளிப்பாடுகள்..
கனவுகள்,
ஆழ்மன படிமங்கள்...
என் கனவுகள்
இழந்தவை பற்றி...
இல்லாதவை பற்றி...
இன்னும் சில பற்றி...
நான் ஒரு விளம்பர பட
இயக்குனர்...
கற்பனைகளை கனவாக்குவேன்..
நான் ஒரு மாய ஜால
மந்திரவாதி..
இல்லாதவற்றை உருவாக்குவேன்..
விதம்விதமாய் இருக்கும்,
என் எல்லாக் கனவுகளும்...
விடியும் வரை நீளும்..
அதிகாலை கனவுகள்
பலிக்காது.. என்னும் அம்மாவின்
சத்தத்துடன்
ஆரம்பமாகிறது
ஒவ்வொரு காலையும்...
இன்றும் நான் ஒன்றாக
கனாக்கண்டேன்...
தமிழ்நிலா
1 comments:
வணக்கம்
கவிதையின் வரிகளை ரசித்தேன் அருமைாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment