என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

அழைப்பு - சிறுகதை


அன்று ஞாயிற்றுக் கிழமை காலை, எல்லா நாட்களைப் போலவுமே அந்த விடியலும். ஏதோ ஒன்றைப்  பறிகொடுத்தவன் போல கட்டில் சட்டத்தில் தலைவைத்து, மேலே சுற்றிக்கொண்டிருக்கும் காற்றாடியைப் பார்த்துக் கொண்டிருந்தான் தீபன். வழமை போல தனது வேலைகளை சமையல் அறையில் தொடங்கியிருந்தாள் ரம்யா.

" இந்தாங்கோ இதை குடிச்சுட்டு எழும்புங்கோ.."  என்றவாறு கட்டிலின் அருகில் இருந்த மேசைமீது தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு திரும்பினாள்.  தீபன், ரம்யாவின் கைகளை பற்றி

"நான் ரொம்ப அதிஷ்டக்காரன் தாண்டி"  என்றவாறு கண்களை நோக்கினான், அதன் உள் அர்த்தம் புரிந்திருக்க வாய்ப்பில்லை, 
"ஏனாக்கும் என்ன நடந்தது"   வழமையான எள்ளலுடன்,  கைகளை விடுவிக்க முயன்றாள். 

நீ இன்னைக்கு அழகாய் இருக்கிறாய்"  என்று  சொல்லி சிரித்தான் தீபன், ரம்யாவும் சிரித்துவிட்டு "அது இன்னைக்கா உங்களுக்கு விளங்கினது"  என்றவாறு உள்ளே போனாள். தீபனும் எழுந்து தேநீர் குடித்துவிடு குளிக்க சென்றான். தீபனின் போன் அடித்தது, விளையாடிக்கொண்டிருந்தாள் ஆசா. ஆஷா இருவரினதும் சுட்டி,

" ஆசா அப்பாட்டை போனை கொண்டே குடு செல்லா.." என சொல்லிவிட்டு தனது வேலையை தொடர்ந்தாள் ரம்யா. அவளும்  போனை  எடுத்துக்கொண்டு கிணற்றடிக்கு நடந்தாள் .

"அப்பா இந்தாங்கோ போன் உங்களுக்கு " என்று போனைக்  கையில் கொடுத்துவிட்டு உள்ளே ஓடினாள்.

போனை  பார்த்தான் தீபன் அதில் ஏஜன்ட் என்று இருந்தது, முதலில் புரியவில்லை பின்னர் கதைக்க தொடங்கினான்.

"நாங்கள் இன்றைக்கு ஒரு கப்பல் அனுப்புறம், அதுல 300 பேர் போகலாம்," என்று மறுமுனையில் எதிரொலித்து.  "ஒரு பிரச்சனையும் இல்லைதானே சார்" என்றவாறு குறுக்கிட்டான் தீபன்.

அவரும் "ஒரு பிரச்சனையும் இல்லைத் தீபன், நான் முதல்லையே சொன்னமாரி இண்டைக்கு 4.30க்கு முன்னம் ஒன்றரை  லட்சம் கட்டிடோனும். 5.30க்கு உங்களை ஏத்துவினம்"  என்று ஒரே கதையுடன் முடித்தான் அந்த முகவர். 

தீபனும் "நான் வந்து மிச்சம் கதைக்கிறன்" என்றான். இணைப்பு துண்டிக்கப்பட்டது.  உடனேயே நண்பனுக்கு அழைத்து "வெளிக்கிட்டு நில் வாறன்"   சுருக்கிக்கொண்டான் உரையாடலை, தலையை துவட்டிக்கொண்டு அறைக்குள் அவசரமாக போனான்.

"எங்க போறீங்க இன்றைக்கு சண்டே , வீட்டில தான் நிக்கணும்" என்றவாறு வெளியே வந்தாள். ஹால் இல் ஆஷா விளயாடிக்கொண்டிருந்தாள்.
"அது என்னண்டா ரம்மி..." என்று தயங்கியவாறு வெளியில் வந்தான் தீபன். "ஒன்னும் இல்லடி, உனக்கே தெரியும் தானே எங்கட நிலைமை, நாளைக்கு என்ன நடக்கும் எண்டே தெரியாது, அதான்டி..." என்று தயங்கும் போது குறுக்கிட்ட ரம்யா, " அதுக்கு இப்ப என்ன.." என்றாள்.

குழந்தையை தூக்கிக்கொண்டு தீபன் சட்டென, "இண்டைக்கு நைட் நான் ஆவுஸ்ரேலியா  போறன்" என்றான். சற்றும் எதிர்பார்க்காத ரம்யா "இப்ப என்ன நடந்தது, நாங்கள் இருக்கிறதை மறந்துடீங்களா." என்றாள். அவள் நிலைகுலைந்திருப்பதை அவளது குரல் விளக்கியது.

"எல்லாம் உங்களுக்காக தான்டி..."
"நாளைக்கு குமார் காசுக்கு வருவான் குடுக்க என்ன இருக்கு
என்ற சமாளிப்புகளுடன் உடுப்புக்களை அடுக்கிக்கொண்டிருந்தான் தீபன். ரம்யா கழுத்தை தடவியபடி மௌனமானாள். இப்போது இருக்கும் இந்த மூன்று பவுண் சங்கிலி தான் அவளுக்கு மிச்சம்,  அத்தனை பேருக்கும் சொத்தும் கூட அது. அவள் இங்கு வரும் போதும் இருந்தது. 

"ஏங்க கட்டாயம் போய்த்தான் ஆகணுமா?" என்று சிணுங்கியபடி கதையை தொடர்ந்தாள். "இன்னும் கொஞ்ச நாளைக்கு தானே, சரியாகிடும்..." என்று முடித்தான் தீபன். பெண்மை மென்மை தானே, இலகுவில் இளகிவிடும். 

பயணப்பையுடன் வெளியே வருவதை பார்த்த ஆஷா, வேலைக்கு போவதாய்  நினைத்து "அப்பா நேசரிக்கு கொப்பி, சொக்கா அப்புறம் அம்மாக்கும் எனக்கும் தம்பிக்கும் ஐஸ் கிரீம்"   என்று அடுக்கிக்கொண்டே போனாள். ஒவ்வொன்றுக்கும் தீபன் ஆமாம் ஆமாம் போட்டுக்கொண்டிருந்தான். ரம்யாவின் கண்ணில் நீர் சொட்ட ஆயத்தமானது. அது அவளது பதிலும் கூட.

"அவளுக்கு நான் என்ன சொல்லுறது அவளுக்காக எண்டாலும் உங்கட முடிவ மாத்துங்கோவன்" என்று சொல்லவும் தீபன் மோடார் சைக்கிளை வெளியே கொண்டுவரவும் சரியாக இருந்தது. ரமியாவிற்ரு அவகாசம் கொடுக்கவில்லை, கிக்கரை அடிக்கும்போது ரம்யாவை திரும்பி பார்த்தான், வெறும் கழுத்தாக நின்றாள், கேட்பதற்குள் சங்கிலியை நீட்டி, "இதை வித்து காசைக் கட்டுங்க" என்றவாறு உள்ளே போனாள். அழுவது அவனுக்கு தெரியாது இருக்க கையாண்ட உத்தி அது. ஆசாவும் அவள் சடையை பிடித்தபடி உள்ளே போனாள்.

உள்ளே போனவள் மகளையும் கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். காரணம் பிரிவு அவளுக்கு புதிது. காரணம் அத்தனை அழகானது அவளது காதல். மோடார் சைக்கிளின் சத்தம் குறைய குறைய அவளது அழுகையும் கூடியது. அவள் கண்முன் பழையவை புயலாக மின்னிக்கொண்டது.

வீட்டுக்கு சென்று நண்பனையும் ஏற்றிக்கொண்டு வழமையாக அவர்கள் கூடும் இடத்திற்கு விரைந்தான். "டேய் உன்கிட்ட ஒண்டு சொல்லணும், நான் இண்டைக்கு கப்பல்ல போறான்." என்றவாறு கண்களை துடைத்தான்.

"என்னடா வீட்டில உள்ளவைய யோச்சியா ரம்யா உந்த நிலைல, ஆசாவும் சின்னன், என்னடா செய்வாள்..."   என்று பேச தொடங்கும் போது "அப்ப நீ என்ன செய்ய சொல்லுறாய் ..?? "   என்று சற்று ஓங்கிய குரலில் சொன்னான், 

"ஒன்றரை லட்சம் கட்டணுமாம் முதல், ரம்யா இந்த சங்கிலிய தந்தவள், "  என்று காட்ட, தினேஷ் இற்கு கோவமே வந்துவிட்டது.
தீபனிடம் சாவியை பறித்து, தான் ஓட்டியவாறு தீபனையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.

"தினேஷ் எனக்கு யாரும் இல்லைடா, அவங்கள பாத்துக்கொள்ளு." என்று சொன்னான்.
திடீர் என்று வங்கியருகில் வண்டிய நிறுத்தி உள்ளே போகமுயல தீபன் சங்கிலியை நீட்டினான், வங்கி உள்ளே சென்று வெளியே காசுடன் வந்தான். காசைக்கையில் கொடுத்து, " இப்ப சந்தோசம் தானே"   என்று சொல்லி, இருவரும் அந்த முகவரின் வீட்டினை அடைந்தார்கள், கால்லிங் பெல் அடிக்க உள்ளே இருந்து வந்தான் அவன்...

" வாங்க தம்பி உட்காருங்க.." என்று அழைத்தான். இருவரும் போய்  அமர்ந்தார்கள்.  தினேஷ் ஆரம்பித்தான். " சார் கடல் பிரயாணம் நம்பேலாது எண்டீனம் , டி.வீ  ல எல்லாம் காட்டீனம்,..." என்று இழுத்தான்.

" அது பிரச்சனை இல்லை, இன்னிக்கு இவரோட சேர்த்து 300 பேரை அனுப்புறம். பெரிய கப்பல். அதுல ஏறின உடனம் சிடிசன் கிடைச்சுட்டு எண்டு வையுங்கோவன்."

"அங்கதே அரசாங்கம் சிடிசன் இல்லை எண்டீனம், நாங்கள் அது வாங்கி தருவம், நீங்கள் போர்டர் தண்ட ஒரு போன் தருவம், அதுல உங்கட வீட்டுக்காரரோட கதைக்கலாம் "என்று நிறுத்தாமல் தொடர்ந்தான்.

"இந்தாங்கோ சார் காசு, மிச்சம் எப்ப கட்டனும்" என்றான்.. "உங்களுக்கு வொர்க் கிடைச்சபிறகு கட்டுங்க"   என்று சொன்னான் அந்த முகவர். அந்த பேச்சில் உண்மை இருப்பது போல் இருந்தது அனைவருக்கும்,

"5 மணிக்கு ஒரு வான் வரும் தம்பி,அதில ஏறுங்கோ, என்று சொல்லிவிட்டு"  உள்ளே போய்விட்டான் அந்த முகவர், வெளியே வந்தார்கள் இவர்கள். வெளியே இவர்களை போல் சிலர், அதே பயணத்திற்காய்..

"மச்சான் நீ கட்டாயம் போகணுமா?"  என்ற தினேஷின் கேள்விக்கு பதில் அற்று இருந்தான் தீபன்

அவர்களது தொடர்பையும் துண்டித்தது அந்த ஹோர்ன் சத்தம், ஒரு வான், அதே வான், சிலருடன் சேர்ந்து இவனும் ஏறிக்கொண்டான், "தினேஷ் இந்தா இதை வித்து காசைக்கொடு.."   என்று மோட்டார் சைக்கிள் திறப்பையும் கொடுத்தான். புறப்பட்டது வாகனம்,

அந்த கடற்கரை அழகாக இருந்தது, ஆனால் அங்கு கப்பல் இல்லை, தோணி ஒன்று நின்றது, 300 பேர் இல்லை, 30 பேர் இருப்பது உறுதி, தோணி சிறிது. என்ன செய்வது திகைத்தான்.

திரும்பிவிட நினைத்தான். காசு கட்டியாகிவிட்டது, ஏறிக்கொண்டான். தோணி புறப்பாது போய்க் கொண்டே இருந்தது. காலமும்.

ஒரு தொலைபேசி அழைப்பு. "அம்மா போன்" என்றாவாறு இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். .....

தமிழ்நிலா 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...