
ஒவ்வொரு பேருந்துப் பயணமும்
ஏதோ ஒன்றைச்
சொல்லியே செல்லும் எனக்கு..
காத்திருப்புக்களின் முடிவில்
மிதிபலகையில் நடத்துனரின்
அதட்டலுடன்ஆரம்பமாகின்றன
என் பயணங்கள்....
கண்கள் இருக்கையை
தேடி அலைதலும்...
கால்கடுக்க நிற்றலும்..
பழக்கமானவையே
ஒவ்வொரு பயணிக்கும்....
இருக்கையில் இருந்து
ஆரம்பிக்கிறது இழப்புக்கள்...
மீதிகளை எண்ணியவாறே
தனிமனித பொருளாதாரம்...
காற்றுக்களை தேடியவாறே
ஒரு மனிதனின் மனதோரம்...
நிம்மதியை தொலைத்தவர்களின்
ஒரு மணிநேர தூக்கம்...
அலப்பறைகள்.. தொகுப்புரைகள்..
அறிவிப்புகள்..தெரிவிப்புக்கள்...
வண்டியின் ஒலிப்பேழையை
மீறி ஒலிக்கும்.... இருப்பினும்...
வண்டியின் அலாரங்கள்
தூக்கத்தை தொலைத்துவிடுகிறது...
என் பயணங்கள் தூரமானவை..
துயரமானவையும் கூட..
இருப்பினும் இப்போதெல்லாம்..
எம் மனிதாபிமானம் பற்றியே
சொல்லும் என் தினப்பயணங்கள்...
தமிழ்நிலா
உதயன் 2014 june
0 comments:
Post a Comment