என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??
Showing posts with label நிலா மொழி. Show all posts
Showing posts with label நிலா மொழி. Show all posts

இன்னும் ஏதோ ஒன்று..



உழைப்பின் வாசம்..
நினைவுகளின் பிசுபிசுப்பு..
அன்பின் பரிதவிப்புக்கள் மீதமிருக்க
அத்தனையும் சூனியமாய்..- கூடவே..
அடையாளம் ஏதுமற்ற நான்,
அடையாளம் கண்ட நீ..

இடைவெளி நெருங்காத
குறும் பயணத்தின்
நீண்ட நேரத்தின் கடை நொடி அது..
நீ, நான் இன்னும் ஏதோ ஒன்று..
எதிரில்  நிறுத்தம்...
மீண்டும் பழகிய ஒன்று..
இருப்பினும் நின்று போன அதே
தரிப்பிடத்திலிருந்து
நீண்டு கொண்டது எம் பயணங்கள்...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

திரும்பிப்பார்



திரும்பிப்பார் மனிதா
உன் கடந்த காலத்தை அல்ல..
உன் பின்னே
ஓடி வந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தை...

நிகழ்காலம் எப்போதோ
தோற்றாகிவிட்டது..
நிகழ்ந்தவை அத்தனையும்
உனக்கு எதிரானவையே..
இறந்தகாலம் எதிர்காலத்தை
கவர்ந்து கொள்கிறது..


திரும்பிப்பார் மனிதா
உன் கடந்த காலத்தை அல்ல..
உன் பின்னே
ஓடி வந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தை...


தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

உயிரெல்லாம் நீ அம்மா...



உயிரெல்லாம் நீ அம்மா...

ம்மா
சையுடன்
ன்னல்களை மறந்து
ன்று
யிர் தந்தாய்,
ன் தந்தாய்,
ழுத்து தந்தாய்,
ற்றம் தந்தாய்,
யம் போக்கினாய்,
ன்பது கிரகங்களும் சுற்றும்
வியம் நீ..
டதம் உன் ன்பு

உயிரெல்லாம் நீ அம்மா...
உன்னை சுற்றியே உயிர் அம்மா...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

நட்சத்திரங்கள்


பனியில் குளிர்ந்த
சூரியப் பொறிகள்..

பருவப் பெண்ணின்
முகப்பருக்கள்..

நிலாவின் அந்தபுர
காவலாளிகள்...

கடலில் இருந்து தப்பிய
தங்க மீன்கள்...

ராத்திரியின்
வேர்வைத்துளிகள்...

வான ராஜாவின்
போராளிகள்...

உலகம்  போத்திக்கொள்ளும்
அழகான போர்வை...

செவ்வாய் பூமிக்கு அனுப்பிய
செய்மதிகள்...

யாருக்கு முதல் இரவு
பூக்கள் போடப்பட்டிருக்கின்றன...

தமிழ்நிலா


உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

மீண்டும் பதற்றமான சூழல்...



மனிதாபிமானத்தை
கைப்பற்றுவதற்காய்
மூன்றாம் உலகப்போர்..

தாய்மொழியின்
படுகொலையை கண்டித்து
ஐந்தாவது ஈழப்போர்...

குடி நீர் பெற
படையெடுப்பு..
உணவுக்காய்
மௌன போராட்டம்...

அன்பை தேடி
நடை பயணம்....
வறுமை ஒழிக்க
உண்ணாவிரதம்....

கலாச்சாரம் வாழ
மனித சங்கிலி...
மரங்களை காக்க
பசுமை புரட்சி...

மீண்டும் 
பதற்றமான சூழல் ஆரம்பம்....
தோழர்களே...
வழமைபோல் பதுங்கிவிடுங்கள்..

காணமல் போன பட்டியலில்
ஒற்றுமையும் சேரட்டும்...

-தமிழ்நிலா-

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...