
என் நிழல்
என்னை போலவே இருக்கும்....
என் நிழல்
என் கூடவே நடக்கும்...
இப்போதெல்லாம் நிழல்
என் கூட நடப்பதே இல்லை..
நிழல் நிஜத்தில் இருந்து
விலகியே நடக்கிறது...
என் நிழலை எவரும்,
பின்தொடர்ந்தால்
பிடிப்பதில்லை..!
இப்போதெல்லாம்
எனக்கு நிழலையே
பிடிப்பதில்லை...!
முன்பெல்லாம் எனக்கு முன்னால்
கால்களுக்கு அடியில் சிறிதாய் இருக்கும்..
சில நாட்களாய் எனக்கு பின்னல்
நீண்டு பெரிதாய் தான் இருக்கிறது...
நிஜத்தை புரிந்து கொள்ளவில்லை...
நிழல் நிழலையே விரும்புகிறது....
நிழல்களுக்கு இடையில் நிஜம்
மாட்டிக் கொண்டுவிட்டது...
நகர்ந்து கொண்டிருக்கிறது
அடர்த்தியான நிழல்களுக்கு இடையில்
மென்மையான நிஜம்...
இதுவரை நிழலை பார்த்து
குரைத்த நாய்கள்..
குரைத்த நாய்கள்..
நேற்றிலிருந்து நிஜத்தை பார்த்து
குரைக்க தொடங்கியிருக்கின்றன...
குரைக்க தொடங்கியிருக்கின்றன...
தமிழ்நிலா
2 comments:
nalla comparison :)
Post a Comment