நீர் உண்டு நிலம் உண்டு
வானம் உண்டு வாயு உண்டு
தீ உண்டு நீ உண்ணும்
மயான பூமியாட இது...
இசைகள் இசையற்று
சுருதிகள் சுதியிழந்து
தாளங்கள் தப்பாய் போன
மனிதங்கள் மரித்து
புனிதங்கள் புதைந்து
கடவுள்கள் காணாமல் போன
மயான பூமியாட இது...
நட்பில் துரோகம்...
காதலில் காமம்...
உறவுகளில் வேஷம்...
எல்லாமே சபிக்கப்பட்ட
குணத்துடன் பணம் கலந்து
செய் நன்றிதனை மறந்த
மொழியுடன் மொழி கலந்து
தாய்மொழி கற்பிழந்த
மயான பூமியாட இது...
என்ன செய்வது
அவளும் என் தாய்தான்,
என்ன செய்வது
அவளும் என் சகோதரிதான்,
என்ன செய்வது
அவளும் என் தோழிதான்....
இசைகளை எழுப்பப்பார்க்கிறேன்,
சுருதிகளை மீட்கப்பார்க்கிறேன்,
என்னால் முடியவில்லை...
கடவுளை தேடிப்பார்க்கிறேன்..
புனிதங்களை தோண்டப்பார்க்கிறேன்
என்னால் முடியவில்லை...
எதுவும் என்னால்
செய்ய முடியாத வாழ்க்கை....
எதுவும் என்னால்
நிர்ணயிக்க முடியாத உலகம்...
ஓரமாய் இருந்து
எழுதிவிட்டு போகிறேன்.. நானும்
இந்த மயான பூமியிடம்...
தமிழ்நிலா
தமிழ்நிலா
5 comments:
வணக்கம்
கவிதையின் வரிகள் மனதை உருகவைத்து விட்டது அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைக்கு அப்படித்தான் ஆகி விட்டது போல...
நன்றி சகோ.. ரூபன்
என்ன செய்வது.. எல்லோராலும் முடியவில்லை போலும். நன்றி..
ஆழமான கருத்துடன் கூடிய
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி
Post a Comment