என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??
Showing posts with label உதயன். Show all posts
Showing posts with label உதயன். Show all posts

தினப்பயணங்கள்...


ஒவ்வொரு பேருந்துப் பயணமும்
ஏதோ ஒன்றைச்
சொல்லியே செல்லும் எனக்கு..
காத்திருப்புக்களின் முடிவில்
மிதிபலகையில் நடத்துனரின்
அதட்டலுடன்ஆரம்பமாகின்றன
என் பயணங்கள்....

கண்கள் இருக்கையை
தேடி அலைதலும்...
கால்கடுக்க நிற்றலும்..
பழக்கமானவையே
ஒவ்வொரு பயணிக்கும்....
இருக்கையில் இருந்து
ஆரம்பிக்கிறது இழப்புக்கள்...

மீதிகளை எண்ணியவாறே
தனிமனித பொருளாதாரம்...
காற்றுக்களை தேடியவாறே
ஒரு மனிதனின் மனதோரம்...
நிம்மதியை தொலைத்தவர்களின்
ஒரு மணிநேர தூக்கம்...

அலப்பறைகள்.. தொகுப்புரைகள்..
அறிவிப்புகள்..தெரிவிப்புக்கள்...
வண்டியின் ஒலிப்பேழையை
மீறி ஒலிக்கும்.... இருப்பினும்...
வண்டியின் அலாரங்கள்
தூக்கத்தை தொலைத்துவிடுகிறது...

என் பயணங்கள் தூரமானவை..
துயரமானவையும் கூட..
இருப்பினும் இப்போதெல்லாம்..
எம் மனிதாபிமானம் பற்றியே
சொல்லும் என் தினப்பயணங்கள்...

தமிழ்நிலா
உதயன் 2014 june

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

பிம்பம் உடைத்தல்...


என்னில் நிறைந்துள்ள
கடதாசிப்பூக்கள்
உன் வார்த்தைகளின்
விசிறல்களில் மலர்ந்தவை..
இருப்பினும்
இன்னமும் இருக்கிறது...

கசப்புகள் படைத்த
ஒரு படையலை
உண்டபதற்காய்
ஒரு குவளை விடம்
நிறைத்துவைத்துள்ளேன்....
இது முடியும் நேரம்

கடவுள் இன்றியும் இருக்கலாம்...
உள்ளே...
திரை அவிழ்கிறது
தீர்மானம் சிரிக்கிறது
சில சிதறிய நரக துளிகள்
வெளியே...

உன் விசையின் விகாரங்கள்
விலகியிருந்தது..
ஒரு கண்ணாடி முகம்
இரண்டாய் உடைந்திருந்தது...

நீயும் நானுமாய்...
நடுவில் நட்பு...

தமிழ்நிலா
உதயன் 29.06.2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

தைமகளே வருக...


பார்மகன் மகிழ
பூமணம் கமழ
வானம் சிவக்க
வண்ணம் மயக்க
பூமித்தாயின்
தைமகளே வருக...

கதிரவன் விரும்பி
கதிரினை தந்த
நெல்மணியின்
தலை மகளே
தைமகளே வருக...

உவகை பொங்க
உலகுக்கு உணவு தந்த
ஈடில்லா உழவனின்
தமிழ் மகளே
தைமகளே வருக...

பழையவை எங்கும்
காற்றோடு போகட்டும்
புதியவை இங்கும்
மண்ணில் தழைக்கடும்...
நில மகளே..
தைமகளே வருக...

இளைத்தவை எல்லாம்
ஓங்கி வளரட்டும்..
இனியவை எல்லாம்
பொங்கி பெருகட்டும்..
தைமகளே வருக...
இன்பங்கள் எல்லாம் தருக...

தமிழ்நிலா... 14.01.2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

உயிரெல்லாம் நீ அம்மா...



உயிரெல்லாம் நீ அம்மா...

ம்மா
சையுடன்
ன்னல்களை மறந்து
ன்று
யிர் தந்தாய்,
ன் தந்தாய்,
ழுத்து தந்தாய்,
ற்றம் தந்தாய்,
யம் போக்கினாய்,
ன்பது கிரகங்களும் சுற்றும்
வியம் நீ..
டதம் உன் ன்பு

உயிரெல்லாம் நீ அம்மா...
உன்னை சுற்றியே உயிர் அம்மா...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

நட்சத்திரங்கள்


பனியில் குளிர்ந்த
சூரியப் பொறிகள்..

பருவப் பெண்ணின்
முகப்பருக்கள்..

நிலாவின் அந்தபுர
காவலாளிகள்...

கடலில் இருந்து தப்பிய
தங்க மீன்கள்...

ராத்திரியின்
வேர்வைத்துளிகள்...

வான ராஜாவின்
போராளிகள்...

உலகம்  போத்திக்கொள்ளும்
அழகான போர்வை...

செவ்வாய் பூமிக்கு அனுப்பிய
செய்மதிகள்...

யாருக்கு முதல் இரவு
பூக்கள் போடப்பட்டிருக்கின்றன...

தமிழ்நிலா


உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...